உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து அன்னம் சீதளிக்குளத்தில் கரைக்கப்பட்டது.

இக்கோயிலில் நேற்று காலை 7:30 மணி அளவில் ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு மூலவர் திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சமைத்த அன்னத்தால் அன்னாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அன்னம், காய்கறி, பழங்கள் அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை பின்னர் மூலவருக்கு நடந்த அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது. பக்தர்களுடன்  கோயிலிலிருந்து அன்னம் புறப்பாடு ஆகியது. சீதளிக்குளத்திற்கு சென்று கிழக்கு தெப்பப் படித்துறையில் ரமேஷ் குருக்களால் சிறப்பு தீபாரதனை நடந்து அன்னம் சீதளிதடாகத்தில் கரைக்கப்பட்டது. பக்தர்களும் திரளாக அன்னத்தை குளத்தில் கரைத்தனர். பின்னர் மீண்டும் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !