சந்திர கிரகணத்தில் திருநள்ளாறு சனிபகவான் கோவில் நடை திறப்பு
காரைக்கால்: சந்திர கிரகணதில் அனைத்து கோவில் அடைக்கப்பட்ட நிலையில் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவில் நடை திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம்.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் விளங்குவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.சந்திர கிரகணம் நேற்று மாலை 5.47.முதல் 6.26வரை தொடங்கியது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்கள் நடை அடைக்கப்பட்டது. பின்னர் சந்திர கிரகணம் முடிந்த மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நடைகள் திறக்கப்பட்டது. பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்ட நிலையில் உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் கோவில் நடை சந்திரகிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருநள்ளாறு கோவிலில் ஸ்ரீதர்பாரனேஸ்வரர் தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீதர்பார்னேஸ்வரர் சுவாமி உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சந்திர கிரகணத்திலும் கோவிலில் பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து சந்திரகிரகணம் முடிந்த கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று பின்னர் மூலவர் ஸ்ரீதர்பாரனேஸ்வரர்,சனிஸ்வரன் அம்பாள் உள்ளிட்ட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனர்.