அம்பாசமுத்திரம் நாமத்துவார் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1066 days ago
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் நாமத்துவாரில் முதல் பிரதிஷ்டை தின (வருஷாபிஷேக) விழா நடந்தது. அம்பாசமுத்திரம் அம்மையப்பர் சன்னதி தெருவில் கடந்தாண்டு நவ., 8ல் நாமத்துவார் பிரார்த்தனை மையம் அமைக்கப்பட்டு, தாயார் மாதுரி ஸ்கீ சமேத பிரேமிக வரதன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று, முதல் பிரதிஷ்டை தின விழா நடந்தது.
காலையில், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையை தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடந்தது. மாலையில் மதுரகீத பஜனை நடந்தது. முதல் பிரதிஷ்டை தினத்தையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் மகா மந்திர அகண்ட நாமம் நடந்தது. டிச., 25 வரை தொடர்ந்து 48 நாட்கள் அகண்ட நாமம் நடக்கிறது.