உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அன்னம் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரிசல்பட்டி கமலாமாம்பிகா சமேத கைலாசநாதர் கோயிலிலும் சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !