ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :1063 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு மேல் வைத்தியநாதசுவாமிக்கு, ஒரு மூடை அரிசியில் அன்னாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளை ரகுபட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர் கோயில் பட்டர்கள் அலுவலர்கள் செய்தனர். பின்னர் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பிறகு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.