பரமக்குடி சாத்தாயி அம்மன், கருப்பண்ணசாமிக்கு அன்னாபிஷேக விழா
ADDED :1063 days ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் மற்றும் கருப்பண்ண சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி மீன் கடை தெரு வைகை ஆறு படித்துறையில் சாத்தாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அன்னாபிஷேக விழா துவங்கி, அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பழங்களால் பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி பெரிய கடை பஜாரில் அமைந்துள்ள குருநாதன் கோயில், கருப்பணசாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அன்னம் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.