பங்குத் திருவிழாவையொட்டி திவ்ய நற்கருணை பவனி!
ADDED :4846 days ago
புதுச்சேரி: புனித சம்மனசுகளின் ராக்கினி ஆலயத்தின் பங்குத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு திவ்ய நற்கருணை பவனி நடந்தது.புதுச்சேரி துய்மா வீதியிலுள்ள புனித சம்மனசுகளின் ராக்கினி ஆலயத்தில் (கப்ஸ் கோவில்) ஆண்டு தோறும், ஆகஸ்ட் கடைசி ஞாயிற்றுக் கிழமை பங்குத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குத் திருவிழா நேற்று முன் தினம் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு திவ்ய நற்கருணை பவனி நடந்தது. முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆலயப் பங்குத் தந்தை மைக்கேல் ஜான், குளூனி உட்பட பல சபைகளைச் சேர்ந்த அருட் சகோதரிகள், குருக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.