உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆதி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

தொண்டாமுத்தூர்: காளியண்ணன்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. தொண்டாமுத்தூர் அடுத்த காளியண்ணன் புதூரில், ஸ்ரீ ஆதி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, கொங்கு திருப்பதி கோவிலில் இருந்து, ஆதி விநாயகர் கோவிலுக்கு, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்துவரப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, பூமி பூஜை நடைபெற்றது. இன்று, காலை, 6:30 மணிக்கு, முதற்கால யாக பூஜையும், மாலை, 7:00 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல், மகா தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 7:45 முதல் 8:45 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !