சூலூர் சித்தி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :1059 days ago
சூலூர்: சூலூர் சந்தைபேட்டை ரோடு, சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சூலூர் சந்தைப்பேட்டை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று இரு கால ஹோமங்கள் முடிந்து சுவாமிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்தப்படுகிறது. நாளை, காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால ஹோமம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, புனித நீர் கலசங்கள் மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டு, சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.