உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பாளையம்: கொண்டையம்பாளையம், அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கொண்டையம்பாளையம், அக்னி முத்து மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள்  செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. காப்பு கட்டுதல், திருவருட்சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் மற்றும் முதற்கால  வேள்வி நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலையில் இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும், விமான கலசங்களை வைத்தலும், எண் வகை மருந்து சாத்துதலும்  நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு, அக்னி முத்து மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பராய சுவாமி மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தசதரிசனம் நடக்கிறது.  பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !