கூர்ம சென்றாயப் பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு விழா.
ADDED :1061 days ago
சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கூர்ம சென்றாயப் பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில் கும்பாபிஷேக விழா முடிவடைந்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஐப்பசி 25 (11.11.2022) வெள்ளிக் கிழமை இன்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை "கணபதி ஹோம பூஜையினைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பெரிய பூசாரி ரங்கசாமி , நிர்வாகி செல்வராஜ் , அறங்காவலர் ரங்கநாதன் உட்பட பலர் செய்துள்ளனர்.