பழநி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :1063 days ago
பழநி: பழநி, அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக பூஜை நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாதாரணை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்து தீபாதாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.