திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் திருப்பணிகள் துவக்கம்
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மங்கல சனீஸ்வர பகவான் கோவிலாக போற்றப்படும் திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனி பகவான், உஷாதேவி, சேஷ்ட்டா தேவி என இரு மனைவிகள், மாந்தி, குளிகன் என இருமகன்களுடன் காகை வாகனம், கொடிமரம், பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புடைய இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதையடுத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்திட ஏதுவாக அதற்கான பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா சிறப்பு யாகங்களுடன் தொடங்கியது. இதில் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.