உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா உற்சாகம்

கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா உற்சாகம்

பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமையல் விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா நேற்று துவங்கியது.


நேற்று காலை 8:30 மணி அளவில் உபனிஷத் பாராயணம், வேத பாராயணம், 9:00 மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 10:15 மணி அளவில் ராதாரோஹணம் நடந்தன. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, மூலவர்கள் கணபதி மற்றும் வள்ளி-தேவயானி சமேத சுப்பிரமணியர் தேரில் எழுந்தருள, ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர என கோஷம் எழுப்பி பக்தர்கள் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான இன்று, மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டம், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலின் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை 6:00 மணி அளவில். விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !