மேகிணறு கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :1095 days ago
அன்னுார்: மேகிணறு கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
ஒட்டர்பாளையம் ஊராட்சி, ஆதி மேகிணற்றில், கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருவறை, மண்டபம், குதிரைகள் அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை விநாயகர் வேள்வி பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து காப்பு கட்டுதல், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை, இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கருப்பராயர், கன்னிமார் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது; தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.