முத்துலாபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1095 days ago
வத்தலக்குண்டு: முத்துலாபுரம் சீதாராம, லட்சுமணன் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் யாக பூஜை மங்கள இசையுடன் துவங்கி முளைப்பாரி பூஜை சுதர்சன, லட்சுமி ஹோமத்துடன் நிறைவடைந்தது. இரண்டாம் கால பூஜை கோ பூஜையுடன் வேத பாராயணம் முழங்க துவங்கியது. ஹோமங்கள் யாத்ராதானம் பாடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை அய்யலூர் ராமசாமி ஐயங்கார் குழுவினர் நடத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த கேசவன் நாகராஜன் சுந்தரவேல் கண்ணய்யா வாசு இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.