உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி

ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி

பேரூர்: தெலுங்குபாளையத்தில், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ ஸத்யாத்ம சேவா ஸமிதி சார்பில், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி தெலுங்குபாளையத்தில் நடந்தது. உத்திராதி மடத்தின் 42வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்கள், ஆண்டுதோறும் தனது குருவான, 41வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த ஸ்ரீ பாதங்களில், பாதுகையை வைத்து ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் பூஜை செய்து வருகிறார்.

கோவையில், கடந்த, 12ம் தேதி துவங்கிய நிகழ்ச்சி மூன்று நாட்களாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, உத்திராதி மடத்தின் 42வதுபீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்கள் தலைமை வகித்து, ஸ்ரீ மூல ராமச்சந்திரர், மூல சீதா தேவியர், திக் விஜயராமர், வித்யவியாசர் ஆகியோரின் கிரீடங்களுக்கு பூஜை செய்தார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஸ்ரீமன் ந்யாய ஸுதா மண்டனம் கிரந்தம் படித்த, 25 பண்டிதர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கினார். இதில், இலவச மருத்துவ முகாம், வேதப்பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. 42வதுபீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்களின், 50 வது ஆண்டு விழாவையொட்டி, 50 ஹோமங்கள் வளர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 50 புண்ணிய நதிநீரை கொண்டு,41வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த ஸ்ரீ பாதங்களுக்கும் மற்றும் 42வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று, ராமர் பீடத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பண்டிதர்களின் உபன்யாசம் மற்றும் மகளிருக்கான சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நரசிம்மா ஆச்சார் மற்றும் கோவை ஸ்ரீ ஸத்யாத்ம சேவா ஸமிதி குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !