உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை வந்த ராம ராஜ்ஜிய யாத்திரை

திருவண்ணாமலை வந்த ராம ராஜ்ஜிய யாத்திரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு, ராமர் ராஜ்ஜிய யாத்திரை ராமர் ரதம் வந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ராமர் ராஜ்ஜிய யாத்திரையில், ராமர் ரதம் அயோத்தியில் தொடங்கி, 60 நாட்களில், 27 மாநிலங்களில், 15 ஆயிரம் கி.மீ., யாத்திரை செய்து, மீண்டும் அயோத்தி சென்றடையும்.  இந்நிகழ்ச்சியை, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ராமர் ரதம் நேற்று மாலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன் வந்தடைந்தது. பின்பு, கிரிவலம் பாதை வழியாக சென்ற, அயோத்தி  ராமர் ரதத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !