உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: மாலை அணிந்து விரதம் துவக்கம்

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: மாலை அணிந்து விரதம் துவக்கம்

கோவை : கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு செல்ல, மாலை அணிய கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று (17ம் தேதி) காலை கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, மாலை அணிந்தனர். கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !