வராக நதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்தனர்
பெரியகுளம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் இன்று முதல் மண்டல பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பெரியகுளத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஜோதி குருசாமி வராக நதி படித்துறை ஐஸ்வர்ய விநாயகர் கோயில் முன்பு மாலை அணிவித்தார். இரு ஆண்டுகள் கொரோனாவிற்கு பிறகு ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனத்திற்கு அதிக அளவில் மாலை அணிந்தனர். குறிப்பாக ஒரு வயது முதல் 10 வயது வரை கன்னிச்சாமிகள் (சிறுவர்கள்) சரணகோஷத்துடன் மாலை அணிந்து கொண்டனர். கணபதி ஹோமம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில், நேற்று முதல் மண்டல பூஜை துவங்குவதை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. ஐயப்பனுக்கு நெய்அபிஷேகம், சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். கார்த்தியை ஒன்றாம் தேதி நேற்று முதல் 41 நாட்களுக்கு தினமும் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பூஜைகளை அர்ச்சகர் பிரசன்னா, ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் செய்து வருகின்றனர்.