சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்
ADDED :1372 days ago
திருப்பரங்குன்றம்: மகாதேவ வைக்கத்தஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேத சிவாகம பாடசாலை மாணவர்களால் சிறப்பு பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. வேத பாடசாலை மாணவர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர்.