உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாதசுவாமி கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

வைத்தியநாதசுவாமி கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் உள்ள காலபைரவருக்கு, நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, மஞ்சள், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !