பொதட்டூர்பேட்டை கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
ADDED :1054 days ago
பொதட்டூர்பேட்டை: கார்த்திகை மாதப்பிறப்பை ஒட்டி, திரளான பக்தர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். பொதட்டூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வழிபாடு நடத்திவரும் அய்யப்ப பக்தர்கள், நேற்று முன்தினம் சிறப்பு உற்சவம் நடத்தினர். அய்யப்ப சுவாமி புலி வாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், படி பூஜை நடத்தி, சரண கோஷம் எழுப்பினர். வரும் மகரஜோதி தரிசனம் வரை, பக்தர்கள் பல்வேறு குழுக்களாக, தங்களின் யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர்.