உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பஜனை

கணியூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பஜனை

உடுமலை,: கணியூர் ஐயப்பன் கோவிலில், இன்று சிறப்பு பஜனை நடக்கிறது.

கணியூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நுாற்றுக்கணக்கானவர்கள், கார்த்திகை முதல் நாளான நேற்றுமுன்தினம், சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதத்ததை துவக்கினர். கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இன்று மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கும், கூட்டு பஜனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !