உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் கயிலை குருமணி நிலையத்தில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நடந்தது. சிதம்பரம் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி நிலையத்தில், தருமை ஆதீனம் சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் அருள் ஆசியுடன் நேற்று கார்த்திகை உத்தரம் நட்சத்திர நாளில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நடந்தது.. இவ்விழாவில் மெய்ப்பொருள் நாயனாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர் இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !