வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷப் பணிகள் துவக்கம்
ADDED :1054 days ago
பழநி: பழநி கோயில் உப கோயிலான வடக்கு கிரி வீதி வீரதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகள் துவங்க பாலாலயம் நடைபெற உள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட உபகோவிலான வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளது. அதன் துவக்கமாக இன்று (நவ.,20) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் வீர துர்க்கை அம்மன் கோயில் விமானம் பாலாலயம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கோயில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்துள்ள முருகன், வள்ளி, தேவயானை சிலை விக்கிரகங்களுக்கும் பாலாலயம் நடைபெற உள்ளது என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.