தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1058 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு, சுவாமி சன்னதி முன் 1008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபி ஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் மூல கருவறை எதிரில், சிறப்பு யாகசாலை அமைத்து, 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.