உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு காணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நடத்தப்படும் நித்ய அன்னதான திட்டத்திற்காக விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரி என்ற பக்தர் இன்று செவ்வாய்க்கிழமை ரூபாய்  ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 8 நூற்று 80 ரூபாயை காணிக்கை யாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினார். காணிக்கையாளருக்கு நன்றி தெரிவித்ததோடு அவருக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு சாமி அம்மையார் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !