உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி அருகே பஞ்சலோக நடராஜர் சிலை கண்டெடுப்பு

சிவகிரி அருகே பஞ்சலோக நடராஜர் சிலை கண்டெடுப்பு

சிவகிரி: சிவகிரி அருகே, தென்னங்கன்று ப்பதற்கு குழி தோண்டிய போது, பஞ்சலோக நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரத்தில், பட்டாங்காடு காளியம்மன் கோவில் உள்ளது. அதற்கு எதிர்புறமுள்ள, நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் தென்னங்கன்று நடுவதற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது, நடராஜர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பொதுமக்கள், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சிவபாக்கிய விநாயகர் கோவிலில் வைத்து மாலை, வஸ்திரம் உடுத்தி, தீபாராதனை பூஜை செய்தனர். சம்பவம் குறித்து, சிவகிரி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் செல்வகுமார், ஆர்.ஐ., சரவணன், ராமநாதபுரம் வி.ஏ.ஓ,, ராமலட்சுமி மற்றும் தலையாரி உள்ளிட்டோர், சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்தனர். கலெக்டர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை சுமார் 52 கிலோ எடையும், இரண்டரை அடி உயரம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !