சபரிமலை தொண்டுக்கு 30 பக்தர்கள் பயணம்
ADDED :1096 days ago
திட்டக்குடி: சபரிமலை பக்தர்கள் தொண்டிற்கு திட்டக்குடி, வேப்பூர் பகுதியைச்சேர்ந்த 30ஐயப்ப பக்தர்கள் ராமநத்தத்திலிருந்து புறப்பட்டனர்.
கடலூர் மாவட்ட அகில பாரத ஜயப்ப சேவா சங்கம் சார்பில், சபரிமலை தொண்டுக்காக திட்டக்குடி, ராமநத்தம், வேப்பூர் பகுதியிலிருந்து பக்தர்கள் புறப்படும் நிகழ்ச்சி, ராமநத்தம் வினாயகர் கோவிலில் நடந்தது. இதையொட்டி ராமநத்தம் பகுதியில் சிறப்பு பூஜை நடந்தது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணைசெயலாளர் சரவணன் தலைமையில், 30பேர் பக்தர்கள் தொண்டுக்காக புறப்பட்டனர். அகில பாரத ஐயப்ப சேவாசங்க மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்டதலைவர் ஜெகன்னாதன், பொருளாளர் மனோகரன், தங்கதுரை, சூரசங்கு, பாண்டியன், மணிகண்டன், ராஜவேல் மற்றும் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.