வல்லபை ஐயப்பன் கோயிலில் ஊஞ்சல் சேவை உற்ஸவம்
ADDED :1048 days ago
ரெகுநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் தேதி முதல் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
சனிக்கிழமை தோறும் மாலை 6:00 முதல் 7:30 மணி வரை உற்ஸவர் வல்லபை ஐயப்பனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வைத்து தாலாட்டி சரணம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஊஞ்சலை சிறுவர், சிறுமிகள் சரண கோஷம் முழங்க பக்திப்பாடல்களை பாடியவாறு ஆட்டுவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதனை தொடர்ந்து கூட்டு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சாமி, மற்றும் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.