உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலமேட்டுப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மேலமேட்டுப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நத்தம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மேலமேட்டுப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கடந்த நவ. 25 பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நவ.26 கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, பூர்ணாகுதி தீபாரதனை, விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனன் உள்ளிட்ட இரண்டு கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று மேளதாளம் மற்றும் பக்தர்கள் ஆரவாரத்துடன் தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின் கோவிலின் உச்சியில் உள்ள கும்பக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, அப்போது கருடன் வானத்தில் வட்டமிட கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, அ.தி.மு.க., நகரச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !