உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மதுரை : மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை  முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார்  திருக்கோயிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரம்  முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் மாலை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !