உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருட்டபள்ளி பள்ளி கொன்டேஸ்வரர் கோயிலில் ருத்ர அபிஷேக பூஜை

சுருட்டபள்ளி பள்ளி கொன்டேஸ்வரர் கோயிலில் ருத்ர அபிஷேக பூஜை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்ட பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ மங்கலா சமேத ஸ்ரீ பள்ளி கொன்டேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று 28 .11. 2023 கார்த்திகை மாத இரண்டாம் திங்கட்கிழமையை ஒட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.  மூலவர் பள்ளிகொன்டேஸ்வரர் சுவாமி சன்னதி எதிரில் பெண்கள் நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். திங்கட்கிழமையை என்பதால் தேவஸ்தானத்தில் நடக்கும் ருத்ரயாகம் மற்றும் ருத்ர அபிஷேக  பூஜைகளில். ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர் இந்நிலையில் விசாகப்பட்டினத்திலிருந்து வந்த  கோலாட்டம் குழுவின்  கோலாட்டம் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !