பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா
ADDED :1126 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா இன்று நிறைவடைகிறது.
இக்கோயிலில் அருள் பாலிக்கும் முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு நவ., 22 ல் செவ்வாய் சாட்டு விழா துவங்கியது. தினமும் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நவ., 29 இன்று இரவு தேவஸ்தானம் சார்பில் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.