உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழா

வரதராஜப்பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழா

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.

இக்கோயிலில் பெருந்தேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கு 40 ஆம் ஆண்டு லட்சாச்சனை விழா நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து கும்பத் திருமஞ்சனம், அனுக்கை மற்றும் சோடஸோபசார தீபாரதனைகள் நடந்தன. பின்னர் 8:30 மணி தொடங்கி மதியம் 12:00 மணி வரையும், மாலை 6:00 மணி தொடங்கி இரவு 9:00 மணி வரையும் லட்ச அர்ச்சனைகள் நடந்தன. அப்போது மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு துளசி மற்றும் மலர்களால் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சவுராஷ்ட்ர சபையார் மற்றும் லட்சார்ச்சனை கமிட்டினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !