காளஹஸ்தி சிவன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .
தென்கைலாயமாக பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீ ஞான பிரசூனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமியின் ஏகாந்த சேவைக்குப் பின்னர் காலபைரவ சுவாமிக்கு பலவிதமான சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து வடைமாலை, எழுமிச்சை பழ மாலை, கஜமாலைகளுடன் காலபைரவர சாமியை சிறப்பு அலங்காரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்த பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களுக்கிடையே மங்கள வாத்தியங்கள் முழங்க காலபைரவர் சுவாமியை கோயில் பிரகார உற்சவம் மிக வைபவமாலை நடைபெற்றது. இதில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் சாமியை தரிசனம் செய்தனர்.