உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கோவில்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

திருக்கோவிலூர் கோவில்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கோவில்களில் போலீசார் தீவிர கண்காணிப்புடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் தலைமையில் வெடிகுண்டு சோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ஐந்து முனை சந்திப்பு மற்றும் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவியுடண் சோதனை மேற்கொண்டனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பாலு, ஆசைத்தம்பி, தலைமைக் காவலர் மணிமுத்தரசன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டு 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !