அதிஷ்டசாலி யார்
ADDED :1041 days ago
மன்னர் ஒருவர் மக்களில் சிறந்தவர் யார் என தெரிந்து கொள்ள மாறுவேடமிட்டு வீதி வலம் வந்தார்.
ஒரிடத்தில் ஒரே ஒருவர் மட்டும் வேலை செய்வதை பார்த்தார். அவரிடம் ‘‘ மற்றவர்கள் எங்கே’’ எனக் கேட்டார். அவர், ‘‘அரண்மனையில் பரிசு தருகிறார்களாம் அதை பெறச் சென்றுள்ளார்கள்’’ என பதில் சொல்லி விட்டு தன் வேலையை மறுபடியும் பார்க்க தொடங்கினார்.
இளைஞனே! நீயும் சென்று பரிசுகளை பெற வேண்டியது தானே எனக்கேட்டார் மன்னர். அதற்கு அவரோ! நான் உழைப்பை நம்புபவன். அதற்காக சென்றால் என் வேலையை மன்னரா வந்து பார்ப்பார் எனச் சொன்னார்.
அவரிடம் இருந்த பொற்காசுப் பைகளை கொடுத்து ‘‘உனது உழைப்பிற்கு மன்னர் தரும் சன்மானம் வைத்துக்கொள்’’ என பாரட்டி விட்டுச் சென்றார் மன்னர். அவர் சென்ற திசைநோக்கி கும்பிடு போட்டார் அந்த இளைஞர்.