உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் தேரோட்டம் கோலாகலம்

அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு "அண்ணாமலைக்கு அரோகரா" என கோஷம்  விண்ணை முட்டும்  அளவிற்கு    பக்தர்களின்  தேரோட்டத்தில்,  பெரிய தேரில் உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாளான இன்று காலை பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் துவங்கியது. இதில் முதலாவதாக விநாயகர்  தேர் வடம் பிடித்து இழுத்து ஏராளமான பக்தர்கள்  வழிபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு "அண்ணாமலைக்கு அரோகரா" என கோஷம்  விண்ணை முட்டும்  அளவிற்கு    பக்தர்களின்  தேரோட்டத்தில்,  பெரிய தேரில் உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் குழந்தையுடன் கரும்புத் தொட்டில் எடுத்து மாடவீதியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !