உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்கபெருமாள் கோயிலில் கார்த்திகை சனி சிறப்பு வழிபாடு

கதிர் நரசிங்கபெருமாள் கோயிலில் கார்த்திகை சனி சிறப்பு வழிபாடு

கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கார்த்திகை 3வது சனிக்கிழமை பூஜை நடந்தது.இதையொட்டி கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கும், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் மற்றும் பால்,பழம் ,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னிதியிலும் பூஜைகள் நடந்தது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கதிர் நரசிங்க பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !