தர்மசாஸ்தா கோவிலில் தசாவதார அலங்காரம்
ADDED :1042 days ago
போத்தனூர்: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவு பகுதியிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில் மகாவிஷ்ணுவின் தசாவதார அலங்கார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று மத்ச்ய அவதாரத்தில் காட்சியளித்தார். மகாவிஷ்ணு ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு அவதாரம் எடுத்து உலகை. ரட்சித்தார்..அந்நிகழ்வை போற்றும் வகையில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படும்: :இரண்டாம் நாளான இன்று கூர்மம், நாளை வராஹா அவதார அலங்காரத்தில் காட்சியளிப்பார். தொடர்ந்து நான்கு முதல் 10-ம் நாள் வரை. முறையே நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமன், கிருஷ்ணர் மற்றும் கல்கி அவதாரங்களில் காட்சியளிப்பார்.