காமாட்சி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :1121 days ago
தொண்டி: தொண்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் 108 விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.