அரவிந்தரின் 72வது நினைவு தினம் அவரது அறை பக்தர்கள் தரிசனத்திற்கு திறப்பு
புதுச்சேரி : மகான் அரவிந்தரின் 72வது மறைவு தினத்தையொட்டி அவரது அவரது அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அரவிந்தர் என்று அழைக்கப்படும் அரபிந்தோ கோஷ் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்து, அதன் பிறகு ஆன்மிகத்தை தழுவினார். இவருடன் அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்பாசும் அரவிந்தரின் ஆன்மீக கடமைகளை இணைந்து செயலாக்கம் செய்தார். அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி 78வது வயதில் காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை காலை அரவிந்தர் ஆசிரமத்தில் முதலில் கூட்டு தியானம் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 5:00 மணியிலிருந்து 10 மணி வரை பார்வையாளர்கள் அரவிந்தரின் அறையை தரிசனம் செய்யலாம்.