உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சூலூர்: கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரவழி மாதப்பூரில் உள்ள, விநாயகர் மற்றும் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் பழமையானது. இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, டிச., 2 ம்தேதி காலை,விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நான்கு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, நேற்று முன்தினம், காலை, 8:00 மணிக்கு, விநாயகர் மற்றும் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. அம்மன் ஒயிலாட்ட குழுவின் ஒயிலாட்டமும், அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும் நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !