உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை தேரோட்டம் கோலாகலம்

சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை தேரோட்டம் கோலாகலம்

தஞ்சாவூர்: சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் திருகார்த்திக்கையை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை  சுவாமிநாதசாமி கோவில், அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு கடந்த நவ. 28ம் தேதி திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி, கொடியெற்றம் நடந்தது. தொடர்ந்து இரவு வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து 29 ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை காலை படிச்சட்டத்திலும், இரவு பலவிதமான வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருக்கார்த்திகை தினத்தனமான டிச.6ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரில் வள்ளி-தேவசேனாவுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், கார்த்திகை தீபம் ஏற்றியும், சொக்கப்பானை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிச.7ம் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !