செட்டித்தாங்கல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழா
ADDED :4801 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் சாகைவார்த்தல் விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 27ம் தேதி குளக்கரையில் இருந்து சக்திகரகம் அழைத்து வரப்பட்டது. மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சாகை வார்த்தல் நடந்தது. தினசரி அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சாவித்திரி சுப்ரமணியன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊர் நாட்டாண்மை வீரக்கவுண்டர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.