உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் கோவில்களில் ஜோதி ஏற்றி வழிபாடு

சூலூர் கோவில்களில் ஜோதி ஏற்றி வழிபாடு

சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில் தீப திருவிழாவை ஒட்டி, ஜோதி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, சூலூர் வட்டார கோவில்களில் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

காங்கயம் பாளையம் விநாயகர் கோவில், சென்னியாண்டவர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் கிருத்திகை பூஜை நடந்தது. கொடிமரத்தில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், செலம்பராயம்பாளையம் அழகீஸ்வரர் கோவில், சூலூர் சிவன் கோவில் மற்றும் அம்மன் கோவில்களில் மஹா தீப வழிபாடு நடந்தது. இதேபோல், பல்வேறு கிராமங்களில் உள்ள, கோவில்களில் ஜோதி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !