உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று இரண்டாவது நாளாக, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீபத்தை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை முதல், விடிய விடிய  கிரிவலம் சென்று, மஹா தீப தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 8:14 மணிக்கு தொடங்கி, இன்று காலை, 9:22 மணி வரை உள்ளது. இதையொட்டி இரண்டாவது நாளாக நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், மஹா தீபத்தை  தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !