நெல் பொங்கல் அய்யனார் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :1052 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெல் பொங்கல் அய்யனார் கோயிலில் 3 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. அருப்புக்கோட்டையில் 30 கிராம முத்தரையர்களுக்கு பாத்தியப்பட்ட சங்கிலி கருப்பசாமி கோயில்களில் 3 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. கோயிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரகஹோமம், மகாலட்சுமி ஹோமம், சாஸ்தா மூல மந்திரம் உட்பட பூஜைகள் நடந்தது. பின்னர் புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்கள், சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்டி சங்கிலிச்சாமி, உதவி செயலர் கிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, துணைத்தலைவர் செல்வராஜன், உதவி பொருளாளர் முத்துமாரி ஆகியோர் செய்தனர்.